வீட்டெல்லாம் இரத்தம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிப்பு .. கடலூரில் பயங்கரம்..!

வீட்டெல்லாம் இரத்தம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிப்பு .. கடலூரில் பயங்கரம்..!

கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கமலீஸ்வரி (வயது 60). இவரது கணவர் சுரேஷ் குமார்.

கம்பவுண்டராக ஆக பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற சுரேஷ்குமார் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக உயிரிழந்தார்.

சுரேஷ் குமார் - கமலீஸ்வரி தம்பதிக்கு இரு மகன்கள் இருந்த நிலையில், மூத்த மகன் சுரேந்திர குமார் (வயது 42) ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஐ.டி ஊழியரான இளைய மகன் சுகந்த் குமார் (வயது 40) ஐதராபாத்தில் வசிக்கிறார். இவரது மகன் நிஷாந்த் குமார் (வயது 10) பாட்டி கமலீஸ்வரியுடன் காராமணி குப்பத்தில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், சுகந்த் குமார் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக கமலீஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். கமலீஸ்வரியின் வீடு வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டினுள் இருந்து புகை நாற்றம் வெளிவந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். வீட்டை திறந்து பார்க்கையில் கமலீஸ்வரி, சுகந்த் குமார், நிஷாந்த் ஆகிய மூவரும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளனர். மேலும் வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக் கிடந்துள்ளது. இதனால், யாரோ மூவரையும் கொலை செய்துவிட்டு அவர்களை எரித்து சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது கொலையாகத் தான் இருக்கும் என போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் கடலூர் எஸ்பி ராஜாராமன் நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு குற்றவாளிகள் யார் என கண்டறியப்பட்டு வருகிறது.

இறந்து போன தாய் கமலேஸ்வரி (63), நிஷாந்த் (10) ஆகியோர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

காராமணி குப்பத்தில் வாரந்தோறும் மாட்டு சந்தை திங்கள்கிழமை நடக்கும். இன்று சந்தை தொடங்கிய நிலையில் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த சூழலில் சந்தைக்கு எதிரே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அங்கு கூடியது.