தூத்துக்குடியில் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக காவலர் மீது முதல் மனைவி புகார்!

தூத்துக்குடியில் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக காவலர் மீது முதல் மனைவி புகார்!

சென்னையில் காவலராக பணி புரியும் தமிழழகன் என்பவர் முதல் மனைவி மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில் முதல் திருமணத்தை மறைத்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துள்ளதாகவும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என முதல் மனைவி கை குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார்

தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் ஆலடியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி செல்வி இவருக்கும் பசுவந்தனை கீழத் தெருவை சேர்ந்த மணிமுத்தாரில் காவல்துறையில் காவலராக வேலை பார்த்த தமிழழகன் என்பவருக்கும் கடந்த 20/ 8 /2021 அன்று திருமணம் நடந்துள்ளது.  

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மணிமுத்தாரில் காவலர் தமிழழகன் மனைவியுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில்  மாரி செல்வி கர்ப்பமாகவே தமிழழகன் நீ கர்ப்பமாகி உள்ளாய் உனக்கு அடிக்கடி தலை சுற்றல் வரும் எனவே நீ உன் அம்மா வீட்டிற்கு செல் நான் வந்து பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதைநம்பி கர்ப்பிணிப் பெண்ணான மாரி செல்வியும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதைத்தொடர்ந்து காவலர் தமிழழகன் மனைவி மாரி செல்வியுடன் உள்ள தொடர்பை துண்டித்ததுடன் அவரை  விவாகரத்து செய்வதற்காக கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் இதற்கு சம்மதம் தெரிவிக்காத மாரிச்செல்வி ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் தனக்கும் தனது குழந்தைக்கும்  கணவர் தமிழழகன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மாதம் 6000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்நிலையில் தனது மணிமுத்தாறில் பணிபுரிந்த காவலர்  மாரி செல்விக்கு தெரியாமல் சென்னைக்கு பணி மாற்றிச் சென்ற காவலர் தமிழழகன் மாரிச்செல்வி மற்றும் அவரது குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க மறுத்து வருவதுடன் முதல் மனைவி மாரிச்செல்வி மற்றும் கைக்குழந்தை இருக்கும் நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் தெரிந்த மாரிச்செல்வி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது ஒன்றரை வயது கை குழந்தையுடன் மற்றும் தனது தாயுடன் வந்த மாரி செல்வி கண்ணீர் மல்க தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் இவ்வாறு முதல் மனைவி இருக்கும் போதும் விவாகரத்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலேயே இரண்டாவது திருமணம் செய்த காவலர் தமிழழகனை பணியிடை நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். 

தூத்துக்குடியில் முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக காவலர் மீது முதல் மனைவி அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.