காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
தூத்துக்குடியில் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி கே.வி.கே., நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்சிவலிங்கம் மகன் அபிமன்யூ (25). இவர் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதனால் மனவேதனையடைந்த அபிமன்யூ நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ஜெய்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.