உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தனிப்பிரிவு தலைமை காவலருக்கு 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு அலுவலக தலைமைக்காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்கள் உடல் நல குறைவு காரணமாக நேற்று காலமானார் - அன்னாரது உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் தகனம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தனிப்பிரிவு அலுவலக பணி பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த திரு. துரைப்பாண்டி 2003ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றினார். அவர் தற்போது மாவட்ட தனிப்பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று நள்ளிரவு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று (27.07.2023) அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கரடிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது.

மேற்படி இறுதிச்சடங்கில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை காவல் ஆய்வாளர் திரு. ரேனியஸ் ஜேசுபாதம், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. விஜயகுமார் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.