ஊராட்சி தலைவர், செயலர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஊராட்சி தலைவர், செயலர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேல திருச்செந்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தினை மாற்றுப் பகுதியில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம்நா.முத்தையாபுரம், கீழநாலுமுலைக்கிணறு, பகுதியில் உள்ள ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து அம்மனுவில் கூறியுறுப்பதாவது; மேல திருச்செந்தூர் ஊராட்சியில் நா. முத்தையாபுரம், நாலு மூலை கிணறு, கீழ நாலு மூலை கிணறு, தளவாய்புரம், கிருஷ்ணா நகர்,தளவாய் புரம் புதூர், வன்னியங்காடு மற்றும் கிராம நிர்வாக கட்டுப்பாட்டில் பிச்சிவிளை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

ஊராட்சி மன்ற அலுவலகம் நடு நாலுமூலைகிணறு அமைந்து இருந்தது கட்டிடம் சேதம் அடைந்ததை தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம் கடந்த 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இடித்து அகற்றப்பட்டது. 26.4.2023 அன்று திட்ட மதிப்பீடு மற்றும் திட்ட வரைபடம் இல்லாமல் நடு நாலு முனை கிணறு அருகே புதிய கட்டிடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றுள்ளது அரசு நெறிப்படி ஒப்பந்தம் கோரப்படவில்லை முறையான நிதி அறிவிப்பு செயல்படுத்தவில்லை இது தொடர்பாக ஊராட்சி தலைவர், செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் புகார் அளித்தும் எந்த விதமான பதிலும் இல்லை நடவடிக்கையும் இல்லை புதிய ஊராட்சி அலுவலகத்தை அனைத்து மக்களின் வசதிக்கு ஏற்ப நடுநாலுமூலைகிணறு பேருந்து நிறுத்தம் அருகில் கட்டிட கோரிக்கை விடுத்தும் நிராகரித்து வருகிறார்கள். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளையும் வாடு உறுப்பினர்களையும் உதாசீனம் செய்து வருகிறார்கள்.

  ஆகவே, பொதுமக்களின் விரோதமாக செயல்படும் ஊராட்சித் தலைவர் ஐ. மகாராஜா, செயலாளர் கோ. மகாராஜா, ஆகியோர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், மற்றும் இதற்கு உடந்தையாக இருக்கும் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.