அரசு மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டவருக்கு சிறை தண்டனை!

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் தகராறில் ஈடுபட்டு மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியவருக்கு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடிநீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 11.12.18 அன்று அரசு மருத்துவர்களிடம் அசிங்கமான வார்த்தை பேசி பணி செய்ய விடாமல் தடுத்து மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியதாக கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் அவருக்கு தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
மருத்துவமனை சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் பாத்தாயிரம் அபராதமும், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அசிங்கமாக பேசியதற்கு ஒரு மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் ஏற்கனவே நீதிமன்றத்தில் டெபாசிட் செய்த 8000 ரூபாயை கோவில்பட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவிற்கு வழங்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.