விளாத்திகுளம் பகுதியில் தனியார் காற்றாலை நிர்வாகத்தின் அராஜகம்: விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு..!
விளாத்திகுளம் பகுதியில் தனியார் காற்றாலை நிர்வாகத்தின் அராஜகம்: விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பா.புவி ராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில்
எட்டையாபுரம் தாலுகா வேலிடுபட்டி முதல் சிங்கிலிபட்டி வரை தனியார் காற்றாலை நிர்வாகத்தால் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கு கிராம விவசாயிகளின் விவசாய நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்களின் வழியாக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மின்கம்பங்கள் நடும் பணியை காற்றாலை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு தருவதாக கூறி மின்கம்பங்கள் நட்டப்பட்டு வருகிறது. ஆனால் ஒப்புக்கொண்டபடி தனியார் காற்றாலை நிர்வாகம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை தராமல் தரவில்லை. அதன் காரணமாக பணிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலங்களில் விவசாய பயிர்களை அழித்து மின்கம்பங்கள் நட்டும் தனியார் காற்றாலை நிறுவனத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே தனியார் காற்றாலை நிறுவனம் முறையான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம்.