தூத்துக்குடியில் செப்.15 வரை நீதிமன்ற புறக்கணிப்பு : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் ஆன்லைன் E-Filing முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஆன்லைன் E-Filing முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் ஆன்லைனில் மூலமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைனில் பதிவு செய்யும் முறையை நீக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Online E-Filing முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நடைமுறையை தொடர வலியுறுத்தியும் வருகிற இன்று முதல் வருகிற 15ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தின் அடுத்த பொதுக்குழு கூட்டம் 15.09.2023 வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணிக்கு நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் 233 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 700 பேர் பங்கேற்றுள்ளனர். இதனால் பல்வேறு வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது.