ஃபோர்க் லிஃப்ட் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஆபரேட்டர் பலி!
ஃபோர்க் லிஃப்ட் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஆபரேட்டர் பலி!
ஆழ்வார்திருநகரி அருகே ஃபோர்க்லிஃப்ட் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையைச் சேர்ந்தவர் கணபதி மகன் இசக்கிமுத்து (48), ஃபோர்க் லிஃப்ட் ஆபரேட்டர். இவர் நேற்று ஆற்றுக்கால் கிராமத்தில் ஃபோர்க் லிஃப்ட் இயந்திரத்தை இயக்கி வந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.