தூத்துக்குடியில் இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு : மர்ம நபர் கைவரிசை!

தூத்துக்குடியில் இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு : மர்ம நபர் கைவரிசை!

தூத்துக்குடியில் பழைய இரும்பு கடை கல்லாவில் இருந்து ரூ.23 ஆயிரத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன்மடம் பகுதியைச் சேர்ந்தவர் பால்கனி மகன் மாரியப்பன் (50). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று பிற்பகல் கடையை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றாராம். 

சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது கடையின் உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.23 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.