தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு!

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாக முகவர்கள் (BLA2) கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2024 ஆம் தேதியை வாக்காளர் தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் சுருக்கமுறை திருத்தப்பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி 01.01.2024 வரை 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2025 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம்.

மேலும் 21.07.2023 முதல் 21.08.2023 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLA2) வீடுவீடாக சென்று வாக்காளர்களின் விபரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள். இதில் நம்முடைய தி.மு.கழகத்தின் சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள பாக முகவர்களின் (BLA-2) பணி குறித்து ஆலோசனை செய்வதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட (1) தூத்துக்குடி (2) கோவில்பட்டி (3) விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான பாக முகவர்கள் கூட்டம் கீழ்க்கண்ட தேதிகளில் அறிவிக்கப்பட்ட இடங்களில் வைத்து நடைபெற இருக்கிறது.

இதில் சம்பந்தப்பட்ட தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பாகமுகவர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

பாக முகவர்கள் கூட்டம் நடைபெறும் இடம்: 

தூத்துக்குடி தொகுதி: 16.07.2023 ஞாயிற்றுக் கிழமை  காலை 10.00 மணி கலைஞர் அரங்கம் தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதி : 16.07.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணி சத்தியபாமா திருமண மண்டபம் கோவில்பட்டி

விளாத்திகுளம் தொகுதி: 22.07.2023 சனிக் கிழமை மாலை 5.00 மணி G.V.M மஹால் அம்பாள் நகர் விளாத்திகுளம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.