பாளை தூய சவேரியார் கல்லூரி சார்பில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு

பாளை தூய சவேரியார் கல்லூரி சார்பில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைப்பு

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தாவரவியல் துறையின் சார்பில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை தாங்கினார். மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் பசுமைப்படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ் முன்னிலை  வகித்தார்.

 இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். சவேரியார் கல்லூரியின் தாவரவியல் துறையைச் சார்ந்த டாக்டர். முத்தீஸ்வரன் மற்றும் டாக்டர்.பாண்டிகுமார் ஆகியோர் மூலிகை செடிகள் மற்றும் கன்றுகளை நடவு செய்யும் பணியில் மாணவர்களை வழி நடத்தினர். சவேரியார் கல்லூரியின் மூலிகை தோட்டம் அமைப்பு செயல்திட்ட உறுப்பினர்களான மதன் மற்றும் மைக்கேல் ஆண்டனி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் அறிவியல் ஆசிரியர்  ஜென்னிங்ஸ் காமராஜ், தேசிய பசுமைப்படை பிரிவு மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மருத்துவ  முக்கியத்துவம் வாய்ந்த மூலிகைகளான ஆடாதோடை,வல்லாரை, பிரம்மி,  நாகமல்லி,  முறிகூட்டி, கூகை நீறு, சிற்றரத்தை, குன்றிமணி போன்றவை சரியான இடைவெளியில் நடப்பட்டன. நீர் பாய்ச்சுவதற்கான புதிய அமைப்பு ஒன்றும் மூலிகை தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மூலிகை தோட்டத்தை உருவாக்கிய தேசிய பசுமை படை மாணவர்களையும், பொறுப்பாசிரியரையும் பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.