முடி திருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுவதை வரைமுறைப்படுத்த வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளர்கள் மாநாட்டில் கோரிக்கை!
முடி திருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுவதை வரைமுறைப்படுத்த வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளர்கள் மாநாட்டில் கோரிக்கை!
முடி திருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுவதை வரைமுறைப்படுத்த வேண்டும் என முடி திருத்தும் தொழிலாளர்கள் மாநாட்டில் கோரிக்கை!
தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் சிஐடியு தொழிற்சங்கத்துடன் இணைந்த தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இதற்கு சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சி முத்து தலைமை வகித்தார்.தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க கௌரவ தலைவர் சதா சிவம் கொடியேற்று வைத்தார். தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க பொருளாளர் வேல்முருகன் வரவேற்று பேசினார். கௌரவ தலைவர் சண்முகம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க பொதுச் செயலாளர் நாகராஜ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.
சிஐடியு மாநில செயலாளர் ஆர்.ரசல் துவக்கவுறை ஆற்றினார். வணக்கத்திற்குரிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ் கண்ணன் சிறப்புரை ஆற்றினார் நிறைவாக கலந்து கொண்ட அனைவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்க துணை செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.
கோரிக்கை தீர்மானங்கள்
முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர் களுக்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் வழங்குவது போல் பணப் பயன்கள் உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் பெறுவதற்கு நிதி வழங்க வேண்டும், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன எனவே அவர்கள் வாங்கிய கல்விக்கடன் மற்றும் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கட்டணத்திலிருந்து விளக்கு அழிக்க வேண்டும்,
மேலும் மானிய விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முடி திருத்தும் தொழில் மற்றும் அழகு கலை தொழிலில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் புகுவதை தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் மூலம் இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,முடி திருத்தும் தொழிலாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும், 1925 தூத்துக்குடியில் காந்திஜியை சந்தித்தபின் கதர் ஆடை அணிந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி விஸ்வநாததாஸ் நினைவிடம் தூத்துக்குடியில் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அழகுக்கலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.