தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகளுக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகளுக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 4 குழந்தைகளுக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறப்பிலேயே குடல் அடைப்பு பிரச்சனை உள்ள 4 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அக்குழந்தைகளுக்கு இன்று ஒரே நாளில் குடல் அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தைகள் நலமுடன் உள்ளனர்.

தலைமை மருத்துவர் எஸ்.வெங்கட சரவணன் மற்றும் உதவி பேராசிரியர் டி.முத்துக்குமரன் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். குடல் அடைப்புகளுக்கு காரணம் பிறவி கோளாறு என்றும், இதை சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை இறந்து போக நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பேட்டியின்போது, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.