தமிழக அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேச்சு!!
"தமிழக அரசியல் அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது. பாஜக மற்றும் பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்" என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
"தமிழக அரசியல் அரசியல் களத்தை பாஜக மாற்றிவிட்டது. பாஜக மற்றும் பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்" என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட பாஜக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: எல்லா மாநிலங்களிலும் அரசியல் களம் மாறிவிட்டது. ஒரு கிளி 30 ஆண்டுகளாக கூண்டிற்குள்ளேயே இருக்குமா? அந்தக் கிளியை திறந்துவிட்டு, பாஜக வந்துவிட்டது, வளர்ந்துவிட்டது என்று கூறினால், அந்தக் கிளி யோசிக்கும். 30 ஆண்டுகளாக இந்த கூண்டிற்குள்தான் நான் இருக்கேன்.
திடீரென வந்து கூண்டை திறந்துவிட்டு என்னை பறந்துபோகச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று அந்தக் கிளி கேட்கும். இதுபோலத்தான் இப்போது தமிழகத்தில் ஆக்ரோஷமாக சில உரையாடல்கள் நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் கூண்டில் அடைப்பட்டிருந்த கிளி பறப்பதற்கு தயாராகிவிட்டது. தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. அது ரோட்டில் நடந்துசெல்லும் சாமானிய மனிதனின் கண்களில் அந்த நம்பிக்கை தெரிகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது.
பாஜகவினர் கூனிகுறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. நெஞ்சை நிமிர்த்தி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கலாம் பாஜகவினர். இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸை விட பாஜக 45% அதிகமாகவே செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் இஸ்லாமிய குழந்தைகளுக்கு உதவித் தொகையை அதிகப்படுத்தி யிருக்கிறோம். அனைவருக்கும் அத்தனை நலத்திட்டங்களை பாஜக ஆட்சி செய்துள்ளது" என்று அண்ணாமலை பேசினார்.