நிதி நிறுவன மேலாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது
கோவில்பட்டியில் நிதி நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து மேலாளா், ஊழியா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.
கோவில்பட்டியில் நிதி நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து மேலாளா், ஊழியா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ராமா் என்ற சீமான் மனைவி ராசாத்தி. இவா், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் பின்புறம் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் 2022, டிசம்பா் 15ஆம் தேதி 5 பவுன் நகையை அடகு வைத்து ரூ.1.50 லட்சம் கடனாகப் பெற்றாராம். தவணை தேதி முடிந்து 3 மாதம் ஆகியும் வட்டி கட்ட வில்லையாம். இதனால் நிறுவனத்தில் இருந்து கடிதம் மூலம் தகவல் தெரிவித்தும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து, நிறுவனத்தில் 2023 ஜூலை 13ஆம் தேதி நகைகள் ஏலம் விடப்பட்டதாம்.
இந்நிலையில், ராசாத்தியின் கணவா் ராமா் என்ற சீமான் நிதி நிறுவனத்திற்கு சென்று அதன் மேலாளா் மற்றும் பணியில் இருக்கும் சக ஊழியா்களையும் அவதூறாக பேசி நகையை கேட்டு தகராறு செய்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து மேலாளரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து நிறுவனத்தின் கிளை மேலாளா் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, நிதி நிறுவன மேலாளரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ராமா் என்ற சீமானை (29) நேற்று கைது செய்தனா்.