தூத்துக்குடியில் பிப்ரவரி 13 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தூத்துக்குடியில் பிப்ரவரி 13  ஆம் தேதி  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கோரம்பள்ளம், தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.

பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடியாக தேர்வு செய்ய உள்ளன.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE, Diploma, ITI, டிரைவர் மற்றும் கணினி பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

வேலை தேடுபவர்கள் தங்களது Bio-data மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும். தனியார் துறையில் பணிநியமனம் செய்யப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.

வேலையளிப்போர்கள் மற்றும் வேலைநாடுநர்கள்

www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு:

???? 0461-2340159

???? Telegram: THOOTHUKUDI EMPLOYMENT OFFICE

இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.