தூத்துக்குடியில் மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: எஸ்பி உத்தரவு!

தூத்துக்குடியில் மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: எஸ்பி உத்தரவு!

தூத்துக்குடி, புதுக்கோட்டை பகுதியில் நேற்று மேலும் 2 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 46 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மேலும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ், சிப்காட்டுக்கும், சிப்காட் சுப்புராஜ், முறப்பநாடு காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். மேலும் தூத்துக்குடி, முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், ராமநாதபுரம் மாவட்டம் 'கியூ' பிரிவுக்கும், முத்தையாபுரம் காவல் நிலையத்துக்கு கிங்ஸ்லி தேவ் ஆனந்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், தூத்துக்குடி நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் உள்பட 19 போலீசார் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதனால் நகர கட்டுப்பாட்டு அறைக்கு பதிலாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.