குடிநீர் தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் மூலமாக தெரிவிக்கலாம்: ஆட்சியர் தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் எண்கள் மூலமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால், தனி அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், குடிநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் கீழ்க்காணும் வாட்ஸ்அப் எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் தொடர்பான புகார்களை மட்டும் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி புகார் தெரிவிக்கும்போது, புகார்தாரரின் பெயர் மற்றும் முகவரியுடன் புகார்கள் தெரிவிக்க வேண்டும்.
மேலும், மாவட்ட அளவில் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு உதவி மையம் உருவாக்கப்பட்டு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை மாவட்ட அளவிலான உதவி மைய எண்ணான 7402908492 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவிக்கலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
ஊராட்சி ஒன்றியங்கள் & வாட்ஸ்அப் எண்கள் விவரம்
தூத்துக்குடி 7402608553
கருங்குளம் 7402608555
திருவைகுண்டம் 7402608557
ஆழ்வார்திருநகரி 7402608559
திருச்செந்தூர் 7402608561
உடன்குடி 7402608563
சாத்தான்குளம் 7402608565
கோவில்பட்டி 7405608567
கயத்தார் 7402608569
ஓட்டப்பிடாரம் 7402608571
விளாத்திகுளம் 7402608573
புதூர் 7402608575