குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை!

கயத்தாறு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை!

கயத்தாறு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வடக்கு கோனார் கோட்டை கிராமத்தில் உள்ள கீழ்த்தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் அண்ணாத்துரை (55). விவசாயி. இவருக்கு கடம்பூர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகள் கற்பகவள்ளி(42) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. பல ஆண்டுகளாக சிகிச்சை எடுத்தும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கற்பகவள்ளி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் கற்பகவள்ளி ஆடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அன்று மாலையில் தோட்டத்தில் பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு, ' எங்கு சென்றாலும் நமக்கு இன்னும் குழந்தை இல்லையா? என உறவினர்கள் கேட்பதால் எனக்கு அவமானமாக இருக்கிறது. இதனால் நான் பூச்சி மருந்தை குடித்து விட்டேன் என கூறிவிட்டு மயங்கி விட்டாரம்.

பதறிப்போன அண்ணாத்துரை அவரது உறவினர்களுடன் தோட்டத்திற்கு ஓடியுள்ளார். அங்கு மயங்கி கிடந்த கற்பக வள்ளியை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.. இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு சப்- இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று, கற்பகவள்ளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.