தூத்துக்குடி அருகே பைக்குகள் மோதி விபத்து : வாலிபர் பலி - 3பேர் படுகாயம்!
தூத்துக்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். 3பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். 3பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை குமாரகிரியைச் சேர்ந்தவர் வேம்பு பெருமாள் மகன் கீர்த்திவாசன் (37), இவர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து சாயர்புரம் தேரி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 3பேர் வந்த பைக் இவரது பைக் மீது மோதியதில் கீர்த்திவாசன் உட்பட 4பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக 4பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கீர்த்திவாசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மற்றொரு பைக்கில் வந்த காயம் அடைந்த கூட்டாம்புளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (27), சாயர்புரத்தை சேர்ந்த முத்து செல்வம் மகன் செந்தில் முருகன் (19), சிவஞானபுரத்தை சேர்ந்த தெய்வமுத்து மகன் பாலு முகேஷ் (19) ஆகிய 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்