தூத்துக்குடியில் மாநகராட்சி வாகனம் மோதி 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்!

தூத்துக்குடியில் மாநகராட்சி வாகனம் மோதி 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்!

தூத்துக்குடியில் மாநகராட்சி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நிறுத்தியிருந்த 6 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள பிரதான சாலையோரத்தில் தேங்கியிருக்கும் மணல்களை அள்ளும் வாகனம் மூலம் மாநகராட்சி ஊழியா்கள் ஸ்டேட் வங்கி காலனி 60 அடி சாலைப் பகுதியில் நேற்று காலையில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள், மின்கம்பம் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாம்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் 6 மோட்டார் சைக்கிள்கள், மாநகராட்சி வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி முழுவதும் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடபாகம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.