ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் சார்பில் மகளிர் தினவிழா
தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் சார்பில் மகளிர் தினவிழா நடைப்பெற்றது.
தூத்துக்குடியில் ஜேசிஐ பியர்ல்சிட்டி குயின்பீஸ் சார்பில் மகளிர் தினவிழா இராமலஷ்மி திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. அதில் பெண் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் பற்றிய உறுதி மொழிகள் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண்களுக்காக கிரிக்கெட் உள்ளிட்ட பல விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் டாக்டர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவினை ஜேசிஐ பெர்ல்சிட்டி குயின்பீஸ் அமைப்பைச் சேர்ந்த தலைவர் மதுமிதா, செயலாளர் லெபோன்ஷியா, முன்னாள் தலைவர் சுபாஷினி, துணை தலைவர் ரத்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்.