தூத்துக்குடியில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்!
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சி ஐ டி யு சார்பில் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது, ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்கின்ற அபதாரத்தை கைவிட வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு 4 லட்சத்திற்கான வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நலவாரிய பென்சன் தொகையை 3000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சி முத்து, மாவட்ட பொருளாளர் அப்பாதுரை, தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க செயலாளர் முருகன், சிஐடியு மாவட்ட இணை செயலாளர் காசி, நிர்வாகிகள் பெருமாள், முனியசாமி, டென்சிங், ஆட்டோ சங்க பொருளாளர் தளவாய் ராஜ், நிர்வாகி கதிர்வேல், விரைவு போக்குவரத்து மாயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.