தூத்துக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தூத்துக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே உ.பி.லக்கிம்பூரில் விவசாயிகள் பேரணியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் கருப்பு தினம் தர்ணா போராட்டம் நடைபெற்றது
உத்தபிரதேசம் மாநிலம் லக்கம்பூரில் விவசாயிகள் பேரணியில் காரை ஏற்றி நான்கு விவசாயிகளை படுகொலை செய்த ஆசிஷ் மிஷ்ராவை கைது செய்ய வேண்டும், அவரின் தந்தை ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும், தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு , ஐ என் டி யு சி, எல் பி எஃப், HMS, AICCTU சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி எஸ் கே எம் தூத்துக்குடி மாவட்ட குழுக்கள் சார்பில் சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே அக்டோபர் 3 ஆம் தேதி கருப்பு தின தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஐ என் டி யு சி மூத்த மாநில தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். சிஐடியூ சார்பில் மாவட்ட தலைவர் பேச்சி முத்து, AITUC சார்பில் பாலசிங்கம், LPF சார்பில் முருகன், INTUC சார்பில் ராஜகோபாலன், HMS சார்பில் ராஜ்குமார், AICCTU சார்பில் சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி ஐ டி யு மாநிலச் செயலாளர் ரசல், AITUC சார்பில் கிருஷ்ணராஜ், LPF சார்பில் சுசி ரவீந்திரன், HMS சார்பில் துறைமுகம் சத்யா, AICCTU சிவராமன், SKM கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
இதில் ஏராளமான தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.