தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயக்குநர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயக்குநர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயக்குநர் திடீர் ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இயக்குநர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்வி இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர் திடீர் ஆய்வு நடத்தினார். 24 மணி நேர அவசர மற்றும் தீவீர சிகிச்சைபிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, பேறுகால சிகிச்சை பிரிவுகளை ஆய்வு செய்த இயக்குநர், மழைநேரங்களில் தண்ணீர் தேங்க கூடிய இடங்களை பார்வையிட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து மருத்துவ அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் இதுபோன்று திடீர் ஆய்வுகள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துவிட்டு சென்றார்.

ஆய்வின் போது, டாக்டர் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாதன், உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள் குமரன், சூர்யபிரதீபா உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.