நெல்லை காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவு.!

நெல்லை காவல் சரகத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கண்ணியாகுமரி, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 10 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சரக‌ டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளர்களுக்கு புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோகிலா தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜகுமாரி தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம், மனவளக்குறிச்சி வட்ட காவல் ஆய்வாளராகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த காந்திமதி தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோமதி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

ALSO READ...தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் மெத்தன போக்கால் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை உயிர் பலி: வாலிபர் சங்கத்தினர் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த வனிதா திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் பணியாற்றி வந்த பாமா பத்மினி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த சாந்தி திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும்,

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தாமஸ், கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளராகவும்,

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வ‌ந்த மாரியம்மாள், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.