தூத்துக்குடி மாவட்டத்தில் 91 மையங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் தகவல்!

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 997 பேர் தேர்வெழுதவுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திங்கட்கிழமை தொடங்க உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 204 பள்ளிகளில் படிக்கக்கூடிய 9,137 மாணவர்கள் மற்றும் 10 ஆயிரத்து 860 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 997 மாணவ, மாணவியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ளனர்.  இவர்களுக்காக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.