பெரியசாமிபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
பெரியசாமிபுரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பொது கழிப்பிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசாமி நகர் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பாதிப்பு, மேலும் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பொதுக்கழிப்பிடம் சேதமாகி பல ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 51 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது பெரியசாமி நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பெரும்பாலும் உப்பளம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏராளமான வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால் இங்கு மாநகராட்சி சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டேய்னரால் ஆன பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டது ஆனால் அந்த பொதுகழிப்பிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக பராமரிக்கப்படாததால் முற்றிலும் இடிந்து சேதமாகி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சியிடம் கழிப்பிடத்தை சீரமைத்து தரகோரி அந்த பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்கள் குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று அப் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை, இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது தேர்தல் காலங்களில் இந்த பகுதிக்கும் வரும் அரசியல்வாதிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை உடனே சரி செய்வோம் என கூறி செல்கின்றனர். ஆனால் இதுவரை தங்கள் பகுதியை கண்டு கொள்ளவில்லை எனவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
எனவே தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அவர்கள் தலையிட்டு தங்கள் பகுதிக்கு உடனடியாக அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.