சென்னையில் பேரதிர்ச்சி! பீகார் இளைஞரின் குடும்பத்தையே கருவறுத்த கொடூர கும்பல்..

சென்னையில் பேரதிர்ச்சி! பீகார் இளைஞரின் குடும்பத்தையே கருவறுத்த கொடூர கும்பல்..

சென்னை அடையாறில் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டது பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என தெரியவந்துள்ளது. மேலும் மனைவி மற்றும் கொலை செய்துள்ளனர்.

சென்னை அடையாறு இந்திரா நகர் முதலாவது அவென்யூவில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் அருகே சாலையோரமாக சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில் இருந்து ரத்தமும் வழிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூட்டையை திறந்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், 30 வயது மதிக்கத்தக்க கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் பைக்கில் வந்து இந்த சாக்கு மூட்டையை வீசி சென்ற காட்சிகள் பாதிவாகி இருந்தது. மேலும் பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டது பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார்(30) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் சிக்கந்தர் (30) உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கவுரவ் குமாரின் மனைவி மற்றும் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கவுரவ் குமாரை மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தையையும் தாங்கள் கொலை செய்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். கொலையாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட மனைவி முனிதா குமாரி மற்றும் குழந்தையின் சடலங்களை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக தேடி வருகின்றனர்.