தூத்துக்குடி மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம் : எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.கள் பணியிட மாற்றம் : எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 18 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 18 இன்ஸ்பெக்டர்களை நிர்வாக காரணங்களுக்காவும், விருப்ப மாறுதல் அடிப்படையிலும் வேறு காவல்நிலையங்களுக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். . 

இதன்படி கோவில்பட்டி கிழக்கு எஸ்ஐ சண்முகம் தூத்துக்குடி தாளமுத்துநகருக்கும், புதியம்புத்தூர் தரன்யா தென்பாகத்திற்கும், முறப்பநாடு காவுராஜன் தூத்துக்குடி தென்பாகத்திற்கும், தருவைகுளம் முனியசாமி தூத்துக்குடி வடபாகத்திற்கும், கண்ட்ராேல் ரூம் ராய்ஸ்டன் மத்தியபாகத்திற்கும், தென்பாகம் மாணிக்கராஜ் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதே போல குரும்பூர் எஸ்ஐ ஜெர்ஸ்லின் புதியம்புத்தூருக்கும், வடபாகம் எஸ்ஐ சுப்புராஜ் சிப்காட்டிற்கும், கழுகுமலை எஸ்ஐ மணிமொழி புதுக்கோட்டைக்கும், எஸ்பி அலுவலகம் ஸ்டீபன் தருவைகுளத்திற்கும், சிப்காட் எஸ்ஐ சிவராஜன் குரும்பூருக்கும், மணியாச்சி எஸ்ஐ முத்துசெல்வம் திருச்செந்தூர் தாலுகாவிற்கும், மதுவிலக்கு எஸ்ஐ முத்துமாலை மணியாச்சிக்கும், கோவில்பட்டி கிழக்கு ஸ்ரீஅருள்மொழி ஓட்டப்பிடாரத்திற்கும், ஏரல் எஸ்ஐ முகம்மதுரபி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தாலுகா எஸ்ஐ சுந்தர் கழுகுமலைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.