பிளஸ் டூ மாணவி உட்பட 2 பெண்கள் திடீர் மாயம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளில் பள்ளி மாணவி உட்பட 2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பிளஸ் டூ மாணவி உட்பட 2 பெண்கள் திடீர் மாயம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் பள்ளி மாணவி உட்பட  2 பெண்கள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி முருகன் இவரது மகள் ரோகினி (17), அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தாயார் அந்தோணியம்மாள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) ஜின்னா பீர் முகமது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம் 

தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் அருகில் உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் முத்துமாரி (18). இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ரவி எப்போதுவென்றான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.