காதல் திருமணம் செய்த இளம்பெண் உட்பட 2 பேர் தற்கொலை!

தூத்துக்குடி வெவ்வேறு சம்பவங்களில் காதல் திருமணம் செய்த இளம்பெண் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

காதல் திருமணம் செய்த இளம்பெண் உட்பட 2 பேர் தற்கொலை!

தூத்துக்குடி வெவ்வேறு சம்பவங்களில் காதல் திருமணம் செய்த இளம்பெண் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்கு அந்தோணியார்புரம் 3 செண்ட் பகுதியை சேர்ந்தவர் மந்திரம். இவருடைய மகன் சண்முகசுந்தரம். ஆட்டோ டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 22) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் பிரையண்ட்நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா இளைப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம். இதில் மனம் உடைந்த ஐஸ்வர்யா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தட்டார்மடம் அருகே உள்ள புத்தன்தருவை கீழுரை சேர்ந்தவர் ஞானராஜ் மகன் மூக்காண்டி (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஜெயா (வயது 37) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே மூக்காண்டிக்கு குடிப்பழக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடிப்பழக்கத்தை கைவிடுமாறு ஜெயா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர். மனைவி ஜெயாவும் வெளியே சென்றுவிட்டார். அப்போது தனியாக இருந்த மூக்காண்டி, வீட்டில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயா அளித்த புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.