தூத்துக்குடி 4வது கேட் நாளை முதல் 3 நாட்கள் மூடப்படும் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட் நாளை இரவு முதல் மூன்று நாட்கள் மூடப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி 4வது கேட் நாளை முதல் 3 நாட்கள் மூடப்படும் : ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட் நாளை இரவு முதல் மூன்று நாட்கள் மூடப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை தூத்துக்குடி இடையே 158 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை வழி ரயில் தடத்தில் மீள விட்டான் தூத்துக்குடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீட்டில் நடைபெற்று வருகின்றன. இதில் இறுதி கட்டமாக மீள விட்டான் முதல் தூத்துக்குடி வரை ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த பணியின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் புதிய பேருந்து நிலையம் அருகே மாற்றப்படுகிறது இந்தப் பணியும் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பாதை பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் இந்த பாதையில்  வரும் 10 தேதி பெங்களூருவில் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையகம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிலையில் இதில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிப்பதற்கான ரயில்வே கட்டுமான பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இதற்காக நான் வரும் 4ஆம் தேதி நாளை இரவு 10 மணி முதல் 8ஆம் தேதி காலை 6 மணி வரை நான்காவது ரயில்வே கேட் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.