தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 34வது மெளலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா!

தூத்துக்குடியில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 34வது மெளலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா: ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 34வது மெளலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா!

தூத்துக்குடியில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 34வது மெளலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா: ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்பு 

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் 7 ஆண்டுகள் குர்ஆன் படித்து முடித்த மாணவர்களுக்கு மெளலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். 2023 ஆண்டிற்கான 34 வது மெளலவி ஆலிம் மஸ்லஹி பட்டமளிப்பு விழா மற்றும் 48 வது ஆண்டு நிறைவு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மன்பவுஸ்ஸலாஹ்  அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி தலைமை தாங்கினார்.

 முன்னாள் துறைமுக பள்ளிவாசல் இமாம் என் எம் கே நூருல்லாஹ் ஆலிம்,  ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மீராசா,  அரபிக் கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்யத் இப்ராஹிம் பாஷா,  ஷம்ஸர்கான் என்ற ராஜா ஆகியோர் முன்னில வைத்தனர். அனைவரையும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி  தலைவர் சகாப்தீன் வரவேற்று பேசினார். ஆண்டறிக்கையை செயலாளர் அபூபக்கர் வாசித்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிப்பூர் ரகுமான்,  அம்ஜத் அலி மஹ்ழரி,  ஜாமியா பள்ளிவாசல் இமாம்கள் அப்துல் அழீம்,  ஷேக் உஸ்மான், சதக்கத்துல்லா, மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் அசராத் அகுமது, தாஜுதீன், முகமது இஸ்மாயில், முஹம்மது கனி, காஜாமைதீன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 இதில் மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் கலந்து கொண்டு செய்யது இப்ராஹிம்,  ரீயாஜ் அகமது, முகமது காசிம், முகமது ஆஷிக் அலி, உள்ளிட்ட மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். முடிவில் பொருளாளர் செய்யது சுலைமான் நன்றி கூறினார் இதை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர ஜமாத் உலமா சபை தலைவர் ஷேக் முகமது துவா ஓதி நிறைவு செய்தார் இந்த நிகழ்ச்சியில் காயல்பட்டினம் ராமநாதபுரம் விருதுநகர் மதுரை நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.

வீடியோ பார்க்க சும்மா தட்டி பாருங்க ????????????