சாத்தான்குளம் அருகே பெண் வக்கீல் குறித்து அவதூறு பரப்பிய‌ வியாபாரி கைது!!

சாத்தான்குளம் அருகே பெண் வக்கீல் குறித்து வாட்ஸ்ஆப் குழுவில் அவதூறு பரப்பியதாக வியாபாரியை போலீசார் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே பெண் வக்கீல் குறித்து அவதூறு பரப்பிய‌ வியாபாரி கைது!!

சாத்தான்குளம் அருகே பெண் வக்கீல் குறித்து வாட்ஸ்ஆப் குழுவில் அவதூறு பரப்பியதாக வியாபாரியை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் கீழத் தெருவைச் சோ்ந்தவா் ஐகோா்ட் ராஜா. காய்கனி வியாபாரி. இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்தவரும், தற்போது உடன்குடியில் வசிப்பவருமான பழ வியாபாரி கொளுந்துவேல் என்பவருக்கும் தசரா குழு தொடா்பான பிரச்னையில் முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், பழனியப்பபுரம் ரத்தினகோபி என்பவரது வாட்ஸ்ஆப் குழு மூலம் ஐகோா்ட் ராஜாவின் மகளும், சாத்தான்குளம் நீதிமன்ற வழக்கறிஞரான சிவமீனா குறித்து கொளுந்துவேல் அவதூறு பரப்பியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.  இதுகுறித்து சிவமீனா அளித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் முத்து, தலைமைக் காவலா் மரியராஜ் அல்போன்ஸ் ஆகியோா் வழக்குப்பதிந்து கொளுந்துவேலை நேற்று கைது செய்தனா்.