தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு!
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் இயங்காததால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இந்த யூனிட்டுகளில் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வருகிறது. கோடை காலத்தில் முழுவீச்சில் யூனிட்டுகள் இயங்கி வந்தன. தற்போது பலத்த காற்று வீசி வருவதால் காற்றாலை மின்சாரம் அதிக அளவில் பெறப்பட்டு வருகிறது. இதனால் 2-வது யூனிட் வருடாந்திர பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று திடீரென 4-வது யூனிட்டில் உள்ள கொதிகலன் குழாயில் ஓட்டை விழுந்தது. உடனடியாக 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் அனல்மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த எந்திரத்தை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.