அனுமதியின்றி வைக்கப்பட்ட 52 விளம்பர பலகைகள் அகற்றம்: தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை!!

அனுமதியின்றி வைக்கப்பட்ட 52 விளம்பர பலகைகள் அகற்றம்: தூத்துக்குடி மாநகராட்சி நடவடிக்கை!!

தூத்துக்குடியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 52 விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக டிஜிட்டல் போர்டுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா உத்தரவின் பேரில் மாநகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் போர்டுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 

அதன்படி நேற்று தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றும் பணிகள் நடந்தது. 

தூத்துக்குடி மாநகராட்சி உதவி பொறியாளர் அனுசவுந்தர்யா, சுகாதார ஆய்வாளர் ஆறுச்சாமி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றினர். 

நேற்று ஒரே நாளில் மொத்தம் 52 விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தினர். மேலும் தொடர்ந்து இதே போன்று விளம்பர பலகைகள் அகற்றும் பணி நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.