தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 81 பேருக்கு உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு!
தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 81 பேருக்கு உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு, 34 உதவி இயக்குனர் நிலையில் பணியிட மாறுதல் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 81 பேருக்கு உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு, 34 உதவி இயக்குனர் நிலையில் பணியிட மாறுதல் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சந்தோசம் ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பதவி உயர்வும்,
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பணியாற்றி வந்த ஏ சிதம்பரம் பணியிடமறுதல் செய்யப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) பணியிலும், அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் உதவி இயக்குனர் (தணிக்கை) பணியாற்றி வந்த சாந்தி கன்னியாகுமரி மாவட்டம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பணியிட மாற்றம் செய்து அரசு முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.