தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே இளைஞர் வெட்டி கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்..!

தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே இளைஞர் வெட்டி கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்..!

தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே இளைஞர் வெட்டி கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்..!
தூத்துக்குடி சங்கரப்பேரி அருகே இளைஞர் வெட்டி கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்..!

தூத்துக்குடி அருகே உள்ள சங்கரப்பேரி பகுதியில் இளைஞர் ஒருவர்  மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள  ஹவுசிங் போர்டு காலனி கேடிசி நகர் பகுதி சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கருப்பசாமி (வயது 27). இவர் சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த  பெண்னை திருமணம் செய்து  உள்ளார். இன்று  சங்கரபேரி பகுதியில் வீட்டில் இருந்தபோது மர்ம கும்பல் புகுந்து கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைககு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட கருப்பசாமி கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த அன்பு சாமி என்பவரை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ஜாமினில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் 2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட அண்புச்சாமி இரு மகன்கள் மற்றும் அவனது கூட்டாளிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். 

கொலை செய்யபட்ட கருப்பசாமி மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியை வீடியோ மற்றும் ஆடியோவாக அறிந்து கொள்ள ...