செல்போன் டவரால் நோய் பாதிப்பு அபாயம் : இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
செல்போன் டவரால் நோய் பாதிப்பு அபாயம் : இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி முத்தையாபுரம் வடக்கு தெருவில் குடியிருப்பு பகுதிக்குள் அமையவுள்ள 5 ஜிசேவைக்கான செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 53வது வார்டு முத்தையாபுரம் வடக்கு தெரு பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன, மேலும் இங்கு இரண்டு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன,
இங்கு குடியிருப்பு பகுதிக்குள் தனியார் நிறுவனம் 5g சேவைக்கான செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டது 5 ஜி சேவை செல்போன் டவர் குடியிருப்பு பகுதிக்குள் அமைத்தால் கதிர்வீச்சு காரணமாக குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினும் பாதிக்கப்படுவார்கள் எனவே செல்போன் டவர் அந்தப் பகுதியில் அமைக்க கூடாது என கூறி அந்த பகுதி மக்கள் செல்போன் டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் தொடர்ந்து அந்த நிறுவனம் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்காமல் குடியிருப்பை விட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்பு இல்லாத பகுதியில் 5 ஜி சேவைக்கான செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க விட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் திமுக கவுன்சிலர் முத்துவேல், வடக்கு தெரு ஊர் தலைவர் மாடசாமி, வரத விநாயகர் கோவில் தெரு ஊர் தலைவர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
வாட்ஸ் ஆப் குரூப்பில் இனைய...