தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி கருணாநிதி 2 வது முறையாக சுமார் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி கருணாநிதி 2 வது முறையாக சுமார் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..!

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடந்தது. இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி தொகுதி தேர்தலில் திமுக கூட்டனி சார்பில் கனிமொழி கருணாநிதி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிவசாமி வேலுமனி, பா.ஜ.க. கூட்டனி சார்பில் த.மா.க வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத்ஜேன், மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று வ.உ.சி பொறியியல் கல்லூரியில் நடந்தது. 2019 நாடாளுமண்ற தேர்தலில் 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில்  4,84,775  வாக்குகள் பெற்று 3,50,390 வாக்குகள் வித்தியாசத்தில்  இரன்டாவது முறையாக வெற்றி பெற்றார். 

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்

கனிமொழி (திமுக)  ‍ - 4,84,775 

ஆர்.சிவசாமி வேலுமணி (அதிமுக)  ‍ - 1,34,385 

ரொவினா ரூத் ஜேன் (நாதக)  ‍ - 1,10,120 

எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா)   ‍ - 1,05,796 

என்.பி.ராஜா (நாம் இந்தியர் கட்சி)  ‍ - 6193 

 அருணாதேவி  (சுயேட்சை)  ‍ - 5579 

சித்திரை ஜெகன் (சுயேட்சை)  ‍ - 2987

சிவனேஸ்வரன் (சுயேட்சை)  ‍ - 2793

சாமுவேல் (சுயேட்சை)  ‍ - 1953

மாணிக்கராஜ் (பகுஜன் சமாஜ்)  ‍ - 1811

ஆசிரியர் சண்முகசுந்தரம் (சுயேட்சை)  ‍ - 1601

கலீர்முருகபாவேந்தன் (மக்கள் நல்வாழ்வு கட்சி)  ‍ - 1505

பொன்குமரன் (சுயேட்சை)  ‍ - 786

காந்திமள்ளர் (சுயேட்சை )  ‍ - 709

ஜெயக்குமார் (சுயேட்சை)  ‍ - 705

 பிஷப் காட்ஃப்ரே நோபல்  (ஜனநாயக பாதுகாப்பு கழகம்)    ‍ - 627

 பெருமாள்குமார் (புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி )  ‍ - 623

 இசக்கிமுத்து (சுயேட்சை)  ‍ - 583

 கண்ணன் (சுயேட்சை)  ‍ - 574

டேவிட் ஜெபசீலன் (சுயேட்சை)  ‍ - 543

சுடலைமுத்து (சுயேட்சை)  ‍ - 508

கிருஷ்ணன் (சுயேட்சை)  ‍ - 413

ராதாகிருஷ்ணன் (சுயேட்சை)  ‍ - 397

ஜேம்ஸ் (சுயேட்சை)  ‍ - 379

பொன்ராஜ் (சுயேட்சை)  ‍ - 362

பிரசண்ணாகுமார் (சுயேட்சை)  ‍ - 311

செல்வமுத்துக்குமார் (சுயேட்சை)  ‍ - 289

செந்தில்குமார் (சுயேட்சை)  ‍ - 252

நோட்டா    ‍ - 8870