முத்தையாபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு!

முத்தையாபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெரு மக்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் பூமயில் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். அம்மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட முனியசாமி கோவில் தெரு, வடக்கு தெரு, பெரியார் தெரு, தோப்புத் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிக்கு மிகவும் நெருக்கமாக உள்ள செல்போன் கோபுரத்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். ஆகையால் அந்த செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட வேண்டும். அதனை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

++++++++++++++++++++++++++++++

செய்தியை வீடியோ மற்றும் ஆடியோவாக அறிந்து கொள்ள ...