விளாத்திகுளம் அருகே தரமின்றி கட்டப்படும் சாலையோர தடுப்புச்சுவர்: பொதுமக்கள் புகார்!
விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் கட்டப்பட்டுவரும் சாலையோர தடுப்புச்சுவர் தரமின்றி கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனை முறையாக ஆய்வு செய்து தடுப்புச்சுவர் கட்டுவதற்கு விளாத்திகுளம் நெடுஞ்சாலைதுறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் கட்டப்பட்டுவரும் சாலையோர தடுப்புச்சுவர் தரமின்றி கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனை முறையாக ஆய்வு செய்து தடுப்புச்சுவர் கட்டுவதற்கு விளாத்திகுளம் நெடுஞ்சாலைதுறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை நெடுஞ்சாலையில் சங்கரலிங்கபுரம் அருகே தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. தடுப்புச்சுவர் என்பது வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் சாலையின் இரு புறபாது காப்பு நலன்கருதி கட்டப்படுவதாகும். ஆனால் இப்பகுதியில் கட்டப்பட்டுவரும் தடுப்புக் சுவர் முற்றிலும் தரமின்றி எப்போது வேண்டுமென்றாலும் சிறிதான அதிர்வு ஏற்பட்டால்கூட இடிந்து விழும் சூழல் உள்ளதாகவும் இது பயனற்றது மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர தடுப்புச்சுவர்களின் இரு புறமும் அருகில் உள்ள கரிசல் மண்ணை ஆழமாக தோண்டி பக்கவாட்டில் போடுகின்றனர்.கரிசல் மண் என்பது தடுப்புச்சுவருக்கு பாதுகாப்பாக இருக்காது. மழை நேரங்களில் எளிதாக உள்வாங்கி பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் பொதுமக்கள் கருத்து கூறுகின்றனர். இதனால் தடுப்புச்சுவர் அடியோடு விழுந்து பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதோடு பண விரயத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
இது குறித்து தொடர்புடைய துறையினர் ஆய்வு செய்து முறையான நட வடிக்கை எடுத்து பாதுகாப்பான கட்டுமான பணிக்கு வழிவகை செய்து தரமான கட்டுமான பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விளாத்திகுளம் நெடுஞ்சாலைதுறை செயற்பொறியாளருக்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் ரமேஷ்குமார் கோரிக்கையாகவும் வேண்டுகோளாகவும் வைத்துள்ளார்.