ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசு்சு
ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசு்சு

குரும்பூா் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 4½ பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீசார் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் அருகே உள்ள யோகரத்தினம் நகரைச் சோ்ந்தவா் அருள்தாஸ் மனைவி உமா எஸ்தா்(41). இவா் நேற்று குரும்பூா் ரயில் நிலையம் அருகே நடந்து வந்தபோது, அந்த வழியாக வந்த மா்ம நபா் ஒருவா் உமா கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லை ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.