பொதுமக்களே உஷார்... சில நொடிகளில் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கலாம்..! பாதுகாப்பான UPI பரிவர்த்தனைக்கு உதவும் டிப்ஸ் இதோ..!

பொதுமக்களே உஷார்... சில நொடிகளில் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கலாம்..! பாதுகாப்பான UPI பரிவர்த்தனைக்கு உதவும் டிப்ஸ் இதோ..!

பொதுமக்களே உஷார்... சில நொடிகளில் லட்சக்கணக்கில் பணத்தை இழக்கலாம்..! பாதுகாப்பான UPI பரிவர்த்தனைக்கு உதவும் டிப்ஸ் இதோ..!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்..

QR CODE ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் மூலம் நேரடியாக பணம் செலுத்த முடியும். தற்போது வெளிநாடுகள் கூட இந்தியாவின் UPI பயணத்தை ஏற்றுக் கொள்கின்றன. இருப்பினும், ஆன்லைன் மோசடி செய்பவர்களின் இலக்காகவும் UPI மாறியுள்ளது. சைபர் கிரிமினல்கள் நொடிப்பொழுதில் லட்சக்கணக்கில் மக்களை ஏமாற்றும் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து வருகின்றனர். ஆன்லைன் கட்டணம் செலுத்தும் சூழலில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் சில பாதுகாப்புக் குறிப்புகளை பார்க்கலாம்..

ஸ்கீரின் லாக் : வலுவான ஸ்கீரின் லாக் (Screen lock) கடவுச்சொல் மற்றும் பின்னை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதை யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது நினைவூட்டுவதற்காக எழுதவோ கூடாது. ஏனெனில் இது உங்கள் தனிப்பட்ட தரவு, நிதித் தகவல்கள் மற்றும் பயன்பாடுகளை மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். பெயர், பிறந்த நாள், மொபைல் எண்கள் போன்ற எளிய கடவுச்சொற்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் பின் நம்பரை ஒருபோதும் பகிர வேண்டாம் : பின் நம்பரை (PIN) பகிர்வது உங்களுக்குப் பெரிய சிக்கல்களை உருவாக்கலாம். எந்தவொரு நபரும் சரியான பின்னைக் கொண்டு உங்கள் ஃபோனை அணுகலாம்.. மேலும் உங்கள் கணக்குகளை சட்டவிரோதப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம். உங்கள் பின் நம்பரை பற்றி யாருக்காவது தெரிந்தால், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதை விரைவாக மாற்ற வேண்டும்.. .

எந்த SMS இணைப்பையும் கிளிக் செய்யாதீர்கள் : தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். சைபர் குற்றவாளிகள் லாபகரமான சலுகைகள் அல்லது உங்கள் கணக்கு மூடப்படும் போன்ற பயமுறுத்தும் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம்.அவர்கள் மின்னஞ்சல், தொலைபேசி செய்திகள் மற்றும் WhatsApp மூலம் இணைப்புகளைப் பகிரலாம். அவர்கள் உங்களை வங்கிப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளலாம் அல்லது குறுஞ்செய்தி அனுப்பலாம். எனவே உங்கள் வங்கி, ஆதார் மற்றும் பான் விவரங்களை தெரியாத நபர்களுடன் எந்த நோக்கத்திற்காகவும் பகிர வேண்டாம். மேலும், சரிபார்க்கப்படாத இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.

UPI செயலிகளை அப்டேட் செய்ய வேண்டும் : உங்கள் UPI பயன்பாடுகளின் சமீபத்திய பதிப்புகளை எப்போதும் பயன்படுத்தவும். ஏனெனில் சமீபத்திய பதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இருக்கும்.. இதன் காரணமாக. இவை ஆன்லைன் ஹேக்கர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும். உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்து பல பேமெண்ட் செயலிகளை பயன்படுத்த வேண்டாம். மேலும், மொபைல் பயன்பாடுகளை நிறுவும் முன் அவற்றின் உண்மைத்தன்மை மற்றும் சான்றிதழ்களை சரிபார்க்கவும்.