சாதிய ரீதியாகவும், மற்ற எல்லா தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது தான் ஒரு நல்ல படைபின் வேலையாக இருக்கும் - திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன்

சாதிய ரீதியாகவும், மற்ற எல்லா தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது தான் ஒரு நல்ல படைபின் வேலையாக இருக்கும் - திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.
திருநங்கையர்களை போற்றும் வகையிலும், திருநங்கையர்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் வானம் என்டர்டைமென்ட் என்ற நிறுவனம் இணைந்து திரு என்ற பெயரில் குறும்படம் ஒன்றை எடுத்து வருகின்றனர். இந்த குறும்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் குறும்படத்தில் இடம் பெறும் பாடல் வெளியீட்டு விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்களில் இன்று நடைபெற்றது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடலை ஜோக்கர் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் வெளியீட்டார்
இதனை தொடர்ந்து திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:--
உலகம் முழுவதும் சிறந்த படைப்பு என்பது அன்பையும், மனிதத்தையும், சமத்துவத்தையும் பேசுவது தான். வார்த்தையில் இருந்து தான் வாழ்க்கை தொடங்குகிறது. சாதிய ரீதியாகவும், மற்ற எல்லா தளங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது தான் ஒரு நல்ல படைபின் வேலையாக இருக்கும்.வெவ்வேறு பெயர்களினால் அழைக்கப்பட்டு கொண்டு இருந்த நிலை மாறி இன்றைக்கு திருநங்கையர்கள் என்று அழைக்கப்படுவதற்கான சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ள திரு குறும்படம் திருநங்கையர்களின் வாழ்க்கையில் ஒளி பாய்ச்சும் படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இவர்களுடன் இணைந்து சிறப்பான முன்னெடுப்பினை எடுத்து இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். குhவல்துறையினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற நிறைய படைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் முழுநீள திரைப்படத்திற்கும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்
நிகழ்ச்சியில் திரு குறும்படத்தின் இயக்குனர் அருந்ததிஅரசு, இணை இயக்குனர் முத்து மணிகண்டன், ஒளிப்பதிவாளர் ஜான் அலெக்ஸ், இசையமைப்பாளர் கோகுல், எடிட்டர் மற்றும் போஸ்டர் டிசைனர் ரிஷி கார்த்திக், இணை தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.