தூத்துக்குடியில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா

தூத்துக்குடியில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் மதுரை துணை மண்டல பொன்விழா அழகர் மஹாலி வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடி கிளை நிலைய பொறுப்பாளர் அருணா வரவேற்புரை வழங்கினார். விருதுநகர் மூத்த இராஜயோக ஆசிரியை செல்வி, தியான அனுபவம் குறித்து உரையாற்றினார். துணை இயக்குநர் ஜெயக்குமார் இயக்குநர் அபு மலை பாண்டியமணி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மதுரை துணை மண்டல இயக்குநர் பிரம்மாகுமாரி உமா ஆசியுரை வழங்கினார்.
தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி இரா.வசந்தி விழா தலைமை உரையாற்றினார். தொழிலதிபர் ஆல்பர்ட் சேவியர், தி விகாசா பள்ளி முதல்வர் வேல்சங்கர், தீயணைப்பு, மற்றும் மீட்புதுறை துணை இயக்குநர் நாட்டார் ஆனந்தி, என்எல்சி சி.இ.ஓ., ஆனந்த ராமானுஜம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்கர் சுப்பு நன்றி உரையாற்றினார். இவ்விழாவினை சிறப்பிக்கும் வண்ணம் சிவாஞ்சலி நாட்டியாலயா குழுவினரின் நாட்டியம் நடைபெற்றது. இவ்விழாவில் பிரம்மா குமாரிகள் அமைப்பை சார்ந்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.