தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேசிய அளவில் அங்கீகாரம் : மேயர் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேசிய அளவில் அங்கீகாரம் : மேயர் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேசிய அளவில் அங்கீகாரம் : மேயர் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சீரும் சிறப்புமாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையானது அதிகரித்து வருகின்றது. 

அதன் ஓரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர மேயராக பதவியேற்ற பின்பு இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத்திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022 ஆம் வருடத்திற்கான போட்டியில் கல்விப் பணியில் சமூக பொருளாதார கட்டமைப்பின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம் ,சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது பரிசு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது எதிர்வரும் செப்டம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் மிகப்பெரிய நிகழ்வில் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்பட உள்ளது .இதன் மூலம் தூத்துக்குடி மாநகராட்சியின் கல்வி சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

இதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும், கழக துணை துணை பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாநகர மக்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.