உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு!
இந்திய அணி சார்பாக உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு செய்யபட்டுள்ளார்.
இந்திய அணி சார்பாக உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடியை சேர்ந்த பள்ளி மாணவி தேர்வு செய்யபட்டுள்ளார்.
இந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டி 19.07.2023 முதல் 22.07.2023 வரை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்-ல் வைத்து நடைபெற்றது. இதில் 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான 144 செ.மீ உயரப் பிரிவில் காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.எல்.மகிஷா பிரியங்கா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்று, இந்திய அணிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
28.08.2023 முதல் 01.09.2023 வரை ஐரோப்பா கண்டம் சரோஜ்வா,போஸ்னிகா எனும் இடத்தில் நடைபெற உள்ள உலக அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள உள்ளார். மேலும் 05.09.2023 முதல் 08.09.2023 வரை லெபனான் எனும் இடத்தில் நடைபெற உள்ள 5வது ஆசிய அளவிலான டேக்வோண்டா போட்டியிலும் இந்திய அணி சார்பாக கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி சார்பாக உலக அளவிலான டேக்வாண்டா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற வீராங்கனை கே.எல்.மகிஷா பிரியங்கா-வை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து பாராட்டினார்கள்.
அதனைத்தொடர்ந்து, 28வது தேசிய இளையோர் எறிபந்து போட்டி 04.08.2023 முதல் 06.08.2023 வரை புதுச்சேரியில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் தூத்துக்குடி கமாக் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கே.செந்தில், பி.திவா, கே.யஸ்வந்த் குமார், ஏ.ஆகாஷ், மாணவி பிளஸ்ஸி ஷேரன் ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். மேலும், தேசிய இளையோர் எறிபந்து போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றதற்காக மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.